நெடுஞ்சாலை பாலம் பராமரிப்புப் பணி: பெயரளவுக்கு நடைபெறுவதாக குற்றச்சாட்டு

ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை பாலங்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை

ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை பாலங்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை அகற்றி, சுத்தம் செய்யும் பணி பெயரளவுக்கு நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆண்டிபட்டியிலிருந்து வெள்ளிமலை, புள்ளிமான்கோம்பை, வைகை அணை, ஏத்த கோவில், வேலப்பர் கோயில் ஆகிய பகுதிகளில் ஓடைகள், கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. மேலும், சாலைப் பாலங்களில் சரிவர பராமரிப்பின்றி அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், வீடுகள், விவசாய நிலங்களில் மழை நீர் புகுந்தது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில், நெடுஞ்சாலைத்துறையினர் பாலங்களில் அடைப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
இப்பணிகள் பெயரளவுக்கு நடைபெற்று வருவதாகவும், இதனால் மழைநீர் செல்ல வழியின்றி மீண்டும் சாலைகள், விளை நிலங்களுக்குள் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி, பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com