வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தப் பணி: தேர்தல் ஆணைய பார்வையாளர் இன்று ஆய்வு

தேனியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் குறித்து தேர்தல் ஆணையத்தின் வாக்காளர்

தேனியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் குறித்து தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மகேசன் காசிராஜன் ஞாயிற்றுக்கிழமை (அக்.14) ஆய்வு செய்கிறார்.
வரும் 2019  ஜனவரி 1-ஆம் தேதியை தகுதியேற்பு நாளாகக் கொண்டு புதிய வாக்காளர் சேர்க்கை, வாக்காளர் பெயர் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் மகேசன் காசிராஜன் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். 
 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் குறித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆலோசனை நடத்துகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com