ரூ.1.44 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல்: 4 பேர் கைது

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே ரூ.1.44 லட்சம் மதிப்பிலான ரூ.2000 கள்ள நோட்டுகளுடன் சுற்றிய 4 இளைஞர்களை போலீஸார் சனிக்கிழமை கைது


தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே ரூ.1.44 லட்சம் மதிப்பிலான ரூ.2000 கள்ள நோட்டுகளுடன் சுற்றிய 4 இளைஞர்களை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
ஆண்டிபட்டி அருகே உள்ள ராஜதானிக்கு உள்பட்ட தோப்புப்பட்டி பகுதியில் சிலர், கள்ளநோட்டுகள் பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து ராஜதானி போலீஸார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கதிர்நரசிங்கபுரம், கால்நடை மருத்துவமனை அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர். இதில், அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசினர். அதையடுத்து அவர்களிடம் நடத்திய சோதனையில் ரூ. 2000 கள்ள நோட்டுகள் ஏராளமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், பிடிபட்டவர்கள் தோப்புப்பட்டியைச் சேர்ந்த பழனி மகன் குமரேசன் (38), மூக்கன் மகன் வசந்தகுமார் (31), கணேசன் மகன் பழனிக்குமார் (21), ஜக்கம்மாள்பட்டி சேகர் மகன் பால்ராஜ் (31) என்பது தெரியவந்தது. அதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.1.44 லட்சம் மதிப்பிலான ரூ. 2000 கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக போலீஸார் தரப்பில் கூறப்படுவதாவது:
ராஜதானி சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கம் உள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, இக்கும்பலை பிடித்துள்ளோம். இவர்கள், கடந்த சில மாதங்களுக்கு முன், கோவையைச் சேர்ந்த சுந்தரிடமிருந்து, இந்த நோட்டுகளை பெற்றுள்ளனர். சுந்தர் ரூ. 1 கோடி மதிப்பிலான கள்ளநோட்டுகளுடன் கோவை போலீஸில் சிக்கி, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com