பெரியகுளத்தில் வாழை இலை விலை வீழ்ச்சி: விவசாயிகள் வேதனை

பெரியகுளம் பகுதியில் வாழை இலை விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

பெரியகுளம் பகுதியில் வாழை இலை விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள கும்பக்கரை, குள்ளப்புரம், தேவதானப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. இதில் சக்கை மற்றும் நாடு, கற்பூரவள்ளி வாழை மரங்களில் குழை தள்ளிய 10 மாதங்களான மரங்களில் இருந்து இலை பறிக்கப்படுகிறது.
இவ்வாறு பறிக்கப்படும் இலைகள் பெரியகுளம் மற்றும் தேவதானப்பட்டி வாழை இலை சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் புரட்டாசி மாதம் என்பதால் முகூர்த்தம் இல்லை. மேலும் பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 20 நாள்களுக்கு மேலாக நல்ல மழை பெய்து வருகிறது.
இதனால் இலைகள் அகன்று நீளமாக உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் அதிகமான இலைகள் வரத்து உள்ளது. இதனால் இலைகள் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்தாண்டு ஒரு கட்டின் விலை ரூ. 2000-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது ரூ. 400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் போதிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து விவசாயி மருதுபாண்டி தெரிவித்தது: 
வாழையில் காய்கள் போதிய விலை கிடைக்கவில்லை என்றாலும் இலையில் நல்ல விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தோம். இந்த ஆண்டும் இரண்டுக்கும் போதிய விலை கிடைக்கவில்லை. ஐப்பசி மாதம் முகூர்த்தம் தற்போது தொடங்கியுள்ளதால் இனிவரும் காலங்களில் நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com