தேனியில் பள்ளி மாணவர்களுக்கு விரைவு மிதிவண்டி போட்டி: ஆட்சியர் தொடக்கி வைத்தார்

தேனியில் முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு சனிக்கிழமை, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையே நடைபெற்ற விரைவு மிதி வண்டி போட்டியில்


தேனியில் முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு சனிக்கிழமை, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையே நடைபெற்ற விரைவு மிதி வண்டி போட்டியில் மொத்தம் 97 பேர் பங்கேற்றனர்.
மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இருந்து இப் போட்டிகளை ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் கொடியசைத்து தொடக்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் சுப்புராஜ் முன்னிலை வகித்தார். மாணவ, மாணவிகளுக்கு தனித் தனிப் பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.
வெற்றி பெற்றவர்கள் விவரம்:
மாணவர்கள் 13 வயதுக்கு உள்பட்டோர் பிரிவில் தேனி, என்.ஏ.கொண்டு ராஜா நினைவு உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த எம்.சிவபிரகாஷ் முதலிடம், கோட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த என்.அஸ்வின் 2-ஆம் இடம், முத்துத்தேவன்பட்டி தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த ஆர்.கோபிநாத் 3-ம் இடம் வென்றனர்.
15 வயதுக்கு உள்பட்டோர் பிரிவில் அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வி.சந்தோஷ்குமார், இ.கிஷோக் வர்த்தணன், என்.விக்ராந்த் ஆகியோர் முறையே முதல் 3 இடங்களை வென்றனர். 17 வயதுக்கு உள்பட்டோர் பிரிவில் அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் எஸ்.ராமகிருஷ்ணன் முதலிடம், தேனி என்.எஸ்.ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் கே.முத்துப்பாண்டி 2-ஆம் இடம், பழனிசெட்டிபட்டி பழனியப்பா நினைவு மேல்நிலைப் பள்ளி மாணவர் எண்.வசீகரன் 3-ஆம் இடம் வென்றனர்.
மாணவிகள் 13 வயதுக்கு உள்பட்டோர் பிரிவில் கோட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஜி.கீர்த்தனா முதலிடம், தேனி பி.சி.பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த கே.திரிஷா 2-ஆம் இடம், பழனிசெட்டிபட்டி பழனியப்பா நினைவு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த எஸ்.மகாவர்ஷினி 3-ஆம் இடம் வென்றனர்.
15 வயதுக்கு உள்பட்டோர் பிரிவில் தேனி பி.சி.பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி கனிஷ்காவர்ஷினி முதலிடம், பழனிசெட்டிபட்டி பழனியப்பா நினைவு மேல்நிலைப் பள்ளி மாணவி எல்.மல்லிகா 2-ஆம் இடம், தேனி பி.சி.பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜெ.நதியா 3-ஆம் இடம் வென்றனர்.
17-வயதுக்கு உள்பட்டோர் பிரிவில் தேனி பி.சி.பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எம்.சத்யா முதலிடம், தேனி பி.சி.பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி தீபாராணி, பழனிசெட்டிபட்டி பழனியப்பா நினைவு மேல்நிலைப் பள்ளி மாணவி ஆர்.கீர்த்திகா 3-ஆம் இடம் வென்றனர்.
முதல் 3 இடங்களை வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ், 4 முதல் 10 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com