செங்கோட்டை-சென்னை கோடை சிறப்பு ரயிலை வெள்ளிக்கிழமைகளில் இயக்க கோரிக்கை

செங்கோட்டை-சென்னை கோடை சிறப்பு ரயிலை வெள்ளிக்கிழமைகளில் இயக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கோட்டை-சென்னை கோடை சிறப்பு ரயிலை வெள்ளிக்கிழமைகளில் இயக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது, சென்னையிலிருந்து செங்கோட்டைக்கு தினமும் பொதிகை அதிவிரைவு எக்ஸ்பிரஸ், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் சிலம்பு விரைவு ரயில் இயக்கப்படுகின்றன. மறு மார்க்கத்தில் வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளில் 2 ரயில்களும் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், செங்கோட்டை-சென்னை வழித்தடத்தில் கோடைகால சிறப்பு ரயில் போக்குவரத்தை தெற்கு ரயில்வே அறிவித்து, ஏப்ரல் முதல் இயக்கி வருகிறது. இதன்படி, சென்னையிலிருந்து ஏப்ரல் 5, 12, 19, 26, மே 3, 10, 17, 24, 31, ஜூன் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் புதன்கிழமை இரவு 9.05 மணிக்கு சென்னையில் புறப்பட்டு, மறுநாள் காலை 10.15 மணியளவில் செங்கோட்டையை அடைகிறது.
மறுமார்க்கத்தில் ஏப்ரல் 6, 13, 20, 27, மே 4, 11, 18, 25, ஜூன் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் வியாழக்கிழமைதோறும் செங்கோட்டையில் மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு சென்னையை சென்றடைகிறது. இதன்மூலம், இவ்வழித்தடத்தில் வியாழக்கிழமைதோறும் 3 விரைவு ரயில்கள் இயங்குகின்றன. வியாழக்கிழமை ஒரே நாளில் மட்டும் 3 ரயில்கள் இயக்கப்பட்டால், பயணிகள் எண்ணிக்கை குறைந்து, ரயில்வேயின் வருவாயும் குறையும் நிலை ஏற்படும்.
எனவே, ஒரே நாளில் 3 எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என, பயணிகள் எதிர்பார்க்கின்றனர். வெள்ளிக்கிழமைதோறும் செங்கோட்டையில் புறப்பட்டு சனிக்கிழமை காலை சென்னை சென்றடையும் வகையில், கோடைகால சிறப்பு ரயிலை மாற்றி இயக்கவேண்டும் என, விருதுநகர், திருநெல்வேலி, கொல்லம் மாவட்டப் பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், சென்னையிலிருந்து வியாழக்கிழமையும், செங்கோட்டையிலிருந்து வெள்ளிக்கிழமையும் புறப்படும் வகையில், கோடைகால சிறப்பு ரயில் போக்குவரத்தை மாற்றி அமைத்தால், பயணிகளுக்கு வசதியாக இருக்கும். ரயில்வே நிர்வாகத்துக்கும் எதிர்பார்த்த வருவாய் கிடைக்கும் என, ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம், ராஜபாளையம் சுழற் சங்கத் தலைவர் ஆனந்த், செயலர் ராம்சங்கர்ராஜா உள்ளிட்டோரும் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com