அருப்புக்கோட்டை பள்ளியில் அறிவியல் கண்காட்சி

அரு ப்புக்கோட்டை சந்திரா நேஷனல் பள்ளியில் அறிவியல் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.

அரு ப்புக்கோட்டை சந்திரா நேஷனல் பள்ளியில் அறிவியல் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.
அப்துல் கலாம் நினைவாக பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த அறிவியல் கண்காட்சியில், பள்ளியின் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில், தனி நபராகவும், குழுவாகவும் தங்களின் அறிவியல் படைப்புகளை மாணவர்கள் காட்சிப்படுத்தினர்.
பள்ளித் தாளாளர் பி.சி. பார்த்திபன், கண்காட்சிக்குத் தலைமை வகித்து தொடக்கி வைத்தார். போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு பள்ளித் தாளாளர் பரிசளித்ததுடன், அப்துல் கலாம் போல சிறந்த விஞ்ஞானியாக வாழ்த்தினார்.
இதற்கான ஏற்பாட்டினை, பள்ளி முதல்வர் கனிமொழி, அறிவியல் துறை ஆசிரியர்கள் வசந்த மீனாள், கார்த்திகாதேவி, அன்புநியா, ஜெப செளந்தர் மற்றும் மாலதி ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com