தரமற்ற முறையில் பாதாளச் சாக்கடை பணிகள்: ஆய்வு செய்ய கோரிக்கை

சாத்தூரில் தரமற்ற முறையில் நடைபெற்று வரும் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளை ஆய்வு செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சாத்தூரில் தரமற்ற முறையில் நடைபெற்று வரும் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளை ஆய்வு செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
      இது குறித்து முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் இளங்கோவன், மாவட்ட நிர்வாகத்துக்கும், குடிநீர் வடிகால் வாரியத்துக்கும் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
      சாத்தூர் நகராட்சியில் சுமார் 32,575 மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.37.66 கோடி செலவில் பாதாளச் சாக்கடைத் திட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் பணி, திட்ட மதிப்பீட்டின்படி சரியான முறையில் நடைபெறவில்லை. 
      தற்போது பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப புதிதாக செயல்படுத்த உள்ள பாதாளச் சாக்கடைத் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் தரமற்றதாகவும், உரிய விதிமுறைகள் பின்பற்றாமலும் நடைபெற்று வருகின்றன. 
மேலும், பாதாளச் சாக்கடைக்கு பதிக்கும் குழாய்கள் எளிதில் உடையும் தன்மையுடையதாய் உள்ளது. எனவே, இப்பணியில் பல்வேறு குறைபாடுகள் உள்ளதாக, அதில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com