"கட்டடப் பொறியாளர்கள் சமூகப் பொறுப்புடன் செயல்பட வேண்டும்'

கட்டடப் பொறியாளர்கள் பொறுப்பு மற்றும் சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும் என கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.

கட்டடப் பொறியாளர்கள் பொறுப்பு மற்றும் சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும் என கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.
   சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்கினிக்கில் கட்டுமானத்தில் புதிய தொழில் நுட்பங்கள் என்ற தலைபிலான கருத்தரங்ம்  செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இரு நாள்கள் நடைபெற்றது. ராம்கோ சிமெண்ட் நிறுவனம் மற்றும் பாலிடெக்னிக் அமைப்பியல்துறை ஆகியவை இணைந்து  நடத்திய நிகழ்ச்சிக்கு பாலிடெக்னிக் முதல்வர் எம்.நந்தகுமார் தலைமை வகித்தார். ராம்கோ சிமெண்ட் நிறுவனத்தின் உதவிப் பொதுமேலாளர் ஆர்.ராமச்சந்திரன் தொடக்கஉரையாற்றினார்.  அவர் பேசியது: கட்டடப் பொறியாளர்கள் பொறுப்பு மற்றும் சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும். சிமெண்ட் தயாரிப்பில் பல வகை உள்ளது.  பி.பி.சி.என்ற வகை சிமெண்ட் பலவகையான சிறப்புக்களை கொண்டது.பி.ஹெச்.சி.சிமெண்ட் என்னும் வகையானது மிக உறுதியாகவும், விரைவில் உலரும் தன்மையும் கொண்டது. இதன் மூலம் விமானநிலையம், ரயில்நிலையம், பேருந்துநிலையம் ஆகிய முக்கிய இடங்களில் குறைந்த நேரத்தில் பழுதுநீக்க இயலும்.நல்ல கட்டடமும், மோசமான கட்டடமும், பொறியாளர்களின் ஈடுபாட்டை பொறுத்தே உள்ளது.
   கட்டடவியல் படிக்கும் மாணவர்கள் சிமின்ட் பகுப்பாய்வு, தயாரிப்பு, ஆய்வு, மூலப்பொருள்கள் தேர்வு, கலவை, காங்கிரீட் குறித்த விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்றார். சென்னை பொறியாளர் ஜி.ஓம்பிரகாஷ் பேசியதாவது: நிலத்தின் தன்மை, சுற்றுப்பூறச்சூழல் குறித்து ஆய்வு செய்த பின்னரே வரைபடம் தயாரிக்க வேண்டும். குறைந்த செலவு, நிறைந்த தரம், நேரம் சிக்கனம் ஆகியவைகளே கட்டிடமேலாண்மையில் எதிர்பார்க்கப்படுகிறது. அஸ்திவாரம் அமைக்கும் போது, கம்பிகளுக்கும், காங்கிரீட் அமைப்புகளுக்கும் சரியான இடைவெளி இருந்தால் கம்பி விரைவில் துருப்படிக்காது. செங்கல் கட்டுமானம், காங்கிரீட், பூச்சுவேலை உள்ளிட்டவைகள் குறித்து மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.துறைத்தலைவர் ஆர்.ராஜசேகரன் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர்  கே.வேல்முருகன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com