சிவகாசி தொழிற்பேட்டை அருகே குப்பை அள்ளாததால் சுகாதாரக்கேடு

சிவகாசி கூட்டுறவு தொழில் பேட்டை அருகே குப்பைகள் அள்ளப்படாததால் சுகாதாரசீர்கேடு ஏற்பட்டு உள்ளது.

சிவகாசி கூட்டுறவு தொழில் பேட்டை அருகே குப்பைகள் அள்ளப்படாததால் சுகாதாரசீர்கேடு ஏற்பட்டு உள்ளது.
   சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் ,சிவகாசி கூட்டுறவு தொழிற்பேட்டை உள்ளது.இதில் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் கிட்டங்கி, காகிதகப் தயாரிப்பு ஆலை, பிள்ஸ்டிக் பைகள் தயாரிக்கும் ஆலை, ஆப்செட் அச்சகங்கள் உள்ளிட்ட பல ஆலைகள் உள்ளன.
    இது ஆனையூர் ஊராட்சியைச் சேர்ந்ததாகும். இந்த தொழிற்பேட்டையின் பிரதான வாயிலருகே பல நாள்களாக குப்பைகள் அள்ளப்படாமல் உள்ளது. ஊராட்சி மன்ற துப்பரவு ஊழியர்கள், காந்திநகர், இந்திராநகர் உள்ளிட்ட பகுதிகளில் சேரும் குப்பைகளை இங்கு வந்து கொட்டி, பின்னர் அள்ளுகின்றனராம். அப்படி கொட்டப்படும் குப்பைகள்  உடனுக்குடன் அள்ளப்படாத நிலையில் நாய், கோழி உள்ளிட்டவை கிளறிவிடுவதால் குப்பைகள் பிரதான சாலைக்கு வந்து விடுகின்றன. இதனால் பாதசாரிகளும், இருசக்கர வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகிறார்கள்.
          மேலும் சுகாதார கேடு பரவி வருகிறது. இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் கூறியதாவது:
    சில சமையங்களில் குப்பைகளில் தீ வைத்துவிடுகிறார்கள். அதனால் நச்சுப் புகை வெளிவந்து வாகன ஓட்டிகள் கஷ்டப்படுகிறார்கள். இது சிவகாசி-ஸ்ரீவில்லிபுதூர் பிரசாதன சாலையாக உள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் இங்கு கொட்டப்படும் குப்பைகளை  உடனுக்குட னுக்குடன் அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com