விருதுநகர் மாவட்டத்தில் அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் அம்பேத்கர் நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டத்தில் அம்பேத்கர் நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
  ஸ்ரீவில்லிபுத்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நில உரிமை மீட்பு இயக்க மாவட்ட அமைப்பாளர் பி.புனிதன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். நிகழ்சியில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எழில்வளவன், வணிகர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் தியாகராஜன், இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை நகர துணை அமைப்பாளர் அறிவுமைக்கேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக  மாவட்ட தலைவர் எஸ். தளவாய் பாண்டியன்  தலைமையில் அம்பேத்கர் உருவச்சிலைக்கு  மாலை அனுவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பொன் சத்தி மோகன்,மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் அய்யனார், செல்வராஜ் ,நகர துணைத் தலைவர் சிவசுப்பிரமணியன் ராதாகிருஷ்ணன் எஸ்.சி பிரிவு ராமர் ,முத்துராஜ் சுடலையாண்டி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 
   இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொ.லிங்கம் தலைமையில் நகரச்செயலாளர்  வி.ரவி, ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்டச்செயலாளர் எஸ் பழனிக்குமார்  உள்ளிட்டோர் ராஜபாளையம் பிரதான சாலையில் உள்ள  அம்பேத்கார் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செய்தனர்.  
  கட்சியின் நகரதுணைச்செயலாளர் எம்.கோவிந்தன், இளைர் பெரு மன்ற நிர்வாகி மகாலிங்கம், மாணவர் மன்ற நிர்வாகி பகத்சிங் உள்ளிட்டோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
   ஆதித்தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்பட பல்வேறு கட்சியினரும் அம்பேத்கார் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செய்தனர்.  
சாத்தூர்: சாத்தூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் வட்டாட்சியர் அலுவகம் முன்பு வைக்கப்பட்ட அம்பேத்கரின் படத்திற்கு சங்க நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.இதில் சங்கத்தின் சாத்தூர் கிளைத்தலைவர் ப்ரியாகார்த்திக் தலைமை வகித்தார். கிளைச்செயலாளர் விஸ்வநாத் முன்னிலை வகித்தார்.    இந்த நிகழ்ச்சியில் தீண்டாமை ஒழிப்பு தொடர்பாக உறுதிமொழி ஏற்கபட்டது.இதில் மாவட்ட செயலாளர் லட்சுமிகாந்தன் நிறைவுரையாற்றினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com