தென்னிந்திய கராத்தே போட்டி: ஸ்ரீவிலி., ராஜபாளையம் பள்ளிகள் சாம்பியன்

ஸ்ரீவில்லிபுத்தூரில் அண்மையில் நடைபெற்ற தென்னிந்திய சோட்டோகான் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில், ராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றனர். 

ஸ்ரீவில்லிபுத்தூரில் அண்மையில் நடைபெற்ற தென்னிந்திய சோட்டோகான் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில், ராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றனர். 
     போட்டியில், தென் மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில், ஒயிட் ஃபீல்டு மழலையர் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். 
இவர்களில் 15 பேர் தங்கப் பதக்கமும், 10 பேர் வெள்ளிப் பதக்கமும், 5 பேர் வெண்கலப் பதக்கமும் வென்றனர். மேலும், சாம்பியன்ஷிப் பட்டமும் இப் பள்ளி வென்றது.
   வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வியாழக்கிழமை பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. பள்ளி முதல்வர் பி. வனிதா தலைமையும், துணை முதல்வர் சி. தேவி முன்னிலையும் வகித்தனர். தாளாளர் எல். ராஜாராம் மாணவர்களுக்குப் பரிசு வழங்கிப் பாராட்டினர். இந்நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவியர் என பலர் கலந்துகொண்டனர்.
ராஜபாளையம்: இன்டர்நேஷனல் சோட்டோகான் கராத்தே அகாதெமி ஆஃப் இந்தியா சார்பில்  ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற கராத்தே போட்டியில், ஏராளமான பள்ளிகளில் இருந்து 900-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். 
    இப்போட்டிகளில், ராஜபாளையம் சத்யா வித்யாலயா பள்ளி மாணவர்கள் 38 பேர் பங்கேற்றனர். அதில், தனிநபர் போட்டியில் 8 மாணவர்கள் தங்கப் பதக்கத்தையும், 11 மாணவர்கள் வெள்ளிப் பதக்கத்தையும், 19 மாணவர்கள் வெங்கலப் பதக்கத்தையும் வென்றனர். 
    போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா, பள்ளித் தாளாளர் செ. குமரேசன் தலைமையிலும்,  பள்ளி மானேஜிங் டிரஸ்டி டாக்டர் சித்ரா குமரேசன், பள்ளி நிர்வாக அதிகாரி அரவிந்த் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில், மாணவர்கள் மற்றும் பயிற்சி அளித்த கராத்தே பயிற்சியாளர் வினோத்தையும் அனைவரும்  பாராட்டி கெளரவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com