விருதுநகர் மாவட்டத்தில் கொடிநாள் வசூல் ரூ.70.84 லட்சம்: ஆட்சியர் தகவல்

விருதுநகர் மாவட்டத்தில் கடந்தாண்டு கொடி நாள் வசூலாக ரூ. 70.84 லட்சம் கிடைத்துள்ளதாக, ஆட்சியர் அ. சிவஞானம் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டத்தில் கடந்தாண்டு கொடி நாள் வசூலாக ரூ. 70.84 லட்சம் கிடைத்துள்ளதாக, ஆட்சியர் அ. சிவஞானம் தெரிவித்தார்.
     மேலும், முன்னாள் படை வீரர்கள் குடும்பத்தினர் 50 பேருக்கு ரூ.7.97 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.      
விருதுநகர்  மாவட்ட  ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் முன்னாள் படைவீரர் நல அலுவலகம் சார்பில், படைவீரர் கொடி நாள் விழா ஆட்சியர் அ. சிவஞானம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது:  
நம் தாய்த் திருநாட்டின் பாதுகாப்புக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட முப்படையினை சார்ந்த முன்னாள் படை வீரர்களை கெளரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் டிசம்பர் 7-ஆம் தேதி கொடி நாள் தினம் நடைபெறுகிறது. எனவே, பொதுமக்கள் இந்த கொடி நாள் விழாவின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டு, முழுமனதுடன் நிதியுதவி வழங்குவதன் மூலம் முப்படையைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் பயன்பெறுவர். 
 இதன்மூலம், முன்னாள் படைவீரர்களின் குடும்பங்களுக்கு திருமண நிதியுதவி, கல்வி உதவித்தொகை, வங்கிக் கடன் வட்டி மானியம், கண் பார்வையற்றோருக்கான நிதியுதவி, மனவளர்ச்சி குன்றிய சிறார்கள், புற்றுநோய் மற்றும் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.  மேலும்,  2016-ஆம் ஆண்டு கொடிநாள் வசூலாக அரசால் நிர்ணயிக்கப்பட்ட ரூ.51,15,000 இலக்கை விட, அதிகமாக விருதுநகர் மாவட்டம் ரூ.70,84,000 வசூலித்து சாதனை படைத்துள்ளது. அதேபோல், 2017 ஆம் ஆண்டுக்கான கொடி நாள் வசூல் ரூ.56,26,500 இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்களது பங்களிப்பை அளிக்கவேண்டும் என்றார். 
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் இ. ஆனந்தகுமார், உதவி இயக்குநர் (முன்னாள் படைவீரர்கள் நலன்) ராமலட்சுமி, முப்படைவீரர் வாரியம் உபதலைவர் மேஜர் கருப்பசாமி, முன்னாள் படைவீரர் நலன் நல அமைப்பாளர் அர்ச்சுனன் மற்றும்  பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள், முன்னாள் படைவீரர்கள் பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com