ஸ்ரீவிலி.யில் கிறிஸ்துமஸ்  நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

ஸ்ரீவில்லிபுத்தூர் சி.எம்.எஸ். மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், ஆதரவற்றோர் மற்றும் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர் சி.எம்.எஸ். மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், ஆதரவற்றோர் மற்றும் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
     கிருபை கிரியை உதவும் கரங்கள் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, இதன் தலைவர் ஆர். ஏசுதாஸ் முத்தையா தலைமை வகித்தார். 
    விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரி விலங்கியல் துறைத் தலைவர் டேவிட் பென்னர், சி.எஸ்.ஐ. மதுரை முகவை திருமண்டல விடுதிகளின் இயக்குநர் சாலமோன், மு. டாலரன்ஸ் சாமுவேல், ஒய்.எம்.சி.ஏ. தலைவர் எஸ். சார்லஸ் மனோகரன், ஓய்வுபெற்ற வட்டாட்சியர் ராஜரத்தினம், ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். அதிகாரி ஆத்மசீலன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அருள்திரு எஸ்.டி. சைமன் முத்துச்சாமி கிறிஸ்துமஸ் தேவ செய்தியளித்து ஆசியுரை வழங்கினார்.
    இதில், 500 ஆதரவற்ற மற்றும் ஏழைகளுக்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலான உணவு, உடை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, ஸ்ரீவில்லிபுத்தூர் நக்சல் தடுப்புப் பிரிவு காவல்ஆய்வாளர் எம். ஜஸ்டின் பிரபாகரன் சிறப்புரையாற்றினார். 
விழாவில், சாட்சியாபுரம் காது கேளாதோர் பள்ளி மாணவ மாணவியரின் கிறிஸ்துமஸ் நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
    இதற்கான ஏற்பாடுகளை, புனித அந்திரேயா குழந்தைகள் வளர்ச்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் கு. ராக்லண்டு நிக்கோலஸ், ஜெபராஜ், பிரேம்தாஸ் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com