கல்லூரியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

சிவகாசி எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரியில் வணிகவியல் துறை சார்பில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சிவகாசி எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரியில் வணிகவியல் துறை சார்பில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
    இந்த நிகழ்ச்சிக்கு, முதல்வர் த. சசிரேகா தலைமை வகித்தார். இதில், விருதுநகர் காமராஜர் பொறியியல் கல்லூரிப் பேராசிரியர் சி.டி. விஜயக்குமார் பேசியது:
     சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மாணவிகள் பங்கு கொள்ளவேண்டும். கழிவுப் பொருள்களை கண்ட இடங்களில் போடாமல் குப்பையில் போட வேண்டும். தற்போது, பாலிதீன் பை உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு அதிகரித்து வருகின்றன.
   எனவே, ஒவ்வொரு மாணவியும் தங்களது பகுதிகளில் வீடு வீடாகச் சென்று, பாலித்தீன் பை உள்ளிட்ட பிளாஸ்டிக்குகளை குப்பைகளில் கொட்டாமல் தனியே எடுத்து வைத்து பழைய காகித வியாபாரிகளிடம் விற்குமாறு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு செய்தால், அந்த பிளாஸ்டிக் பொருள்கள் மறுசுழற்சிக்குப் பயன்படுவதுடன், குப்பைகளில் தேங்கி சுற்றுச்சூழல் பாதிக்காது. கூட்டு முயற்சியாலேயே சுற்றுச் சூழலை பாதுகாக்க முடியும் என்றார்.    இம்முகாமுக்கான ஏற்பாடுகளை, வணிகவியல் சுயநிதி பிரிவினர் செய்திருந்தனர். முன்னதாக, துறைத் தலைவர் மீ. ஜெயலட்சுமி வரவேற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com