மக்காச்சோளத்துக்கு காப்பீடு இல்லை: விவசாயிகள் அதிர்ச்சி

ராஜபாளையம் பகுதியில் மக்காச்சோளத்துக்கு காப்பீடு இல்லை என கூறப்பட்டதால், விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.
மக்காச்சோளத்துக்கு காப்பீடு இல்லை: விவசாயிகள் அதிர்ச்சி

ராஜபாளையம் பகுதியில் மக்காச்சோளத்துக்கு காப்பீடு இல்லை என கூறப்பட்டதால், விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.
   சோழபுரம் குறுவட்டம், தெற்கு வெங்காநல்லூர், சோழபுரம், ஜமீன்நத்தம் பட்டி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் விவசாயிகள் மக்காச்சோளம் அதிக பரப்பளவில் பயிரிட்டுள்ளனர். இப்பகுதியில், பல ஆண்டுகளாக மக்காச்சோளம் விவசாயமே பிரதானமாக உள்ளது.
   இந்நிலையில், பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகளை சேர்ப்பதற்கான விழிப்புணர்வுக் கூட்டம் கடந்த நவம்பர் மாதம் சிங்கராஜாகோட்டை தொடக்க வேளாண் கடன் சங்கக் கட்டடத்தில் நடைபெற்றது. சங்கத்தின் உதவி வேளாண் இயக்குநர், நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் காப்பீட்டு நிறுவனத்தினர் இணைந்து இத்திட்டத்தை அறிமுகம் செய்தனர்.
   அப்போது, மக்காச்சோளத்துக்கு காப்பீட்டு கட்டணத்தை தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக செலுத்த ஆலோசனை கூறப்பட்டதன்படி, நவம்பர் 1 ஆம் தேதி முதல் மக்காச்சோளப் பயிர்க்கு தெற்கு வெங்காநல்லூர், சோழபுரம், ஜமீன்நத்தம்பட்டி கிராம தொடக்க வேளாண் கடன் சங்கங்களில் 500 விவசாயிகள் கட்டணம் செலுத்தினர்.
   தற்போது, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் வழிகாட்டுதலின்படி, இந்த 3 கிராமங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட பயிரில் மக்காச்சோளம் இல்லை என அதிகாரிகள் கூறுவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
   இதில், வேளாண் அதிகாரிகளின் சரியான வழிகாட்டுதல் இல்லை. இப்பகுதிக்குள்பட்ட அனைத்து விவசாயிகளும் பிரீமியம் செலுத்தி உள்ளோம். மழை பொய்த்து இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மூன்று மாதங்களுக்குப் பிறகு காப்பீடு இல்லை என அதிகாரிகள் கூறுகின்றனர். எனவே, அரசு உரிய நடவடிக்கை எடுத்து, பயிர் காப்பீடு கட்டணம் செலுத்திய அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்கவேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com