தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஜூலை 24-இல் 2-ஆம் கட்ட பணியிடை பயிற்சி தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான 2}ஆம் கட்ட பணியிடை பயிற்சி இம்மாதம் 24 ஆம் தேதி தொடங்க உள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான 2}ஆம் கட்ட பணியிடை பயிற்சி இம்மாதம் 24 ஆம் தேதி தொடங்க உள்ளது.
அனைருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வள மையத்திற்கு உள்பட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை முதற்கட்ட பணியிடை பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. இதில் 5 ஆம் வகுப்பு வரையிலான தமிழ், கணிதம், அறிவியல் சமூகவியல் ஆகிய பாடங்களில் 201 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
மாணவர்களுக்கு எளிய முறைகளில் பாடங்களை ஏ.பி.எல். மற்றும் எஸ்.எல்.எம். முறைகளில் எவ்வாறு கற்றுத் தருவது? பின்தங்கிய மாணவர்களுக்கு எவ்வாறு சிறப்பு கவனம் செலுத்துவது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் எஸ்.மாடசாமி தலைமையில் ஆசிரியப் பயிற்றுநர்கள் வேணி, கணேஷ்வரி, மருதக்காளை, ஜூடு அமலன், சுந்தரேஸ்வரி, கனகலட்சுமி, முத்துலட்சுமி, மீனலோஷினி மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்த ரவீந்திரன்ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
பயிற்சியை விருதுநகர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் நடராஜன், உதவி திட்ட அலுவலர் நல்லதம்பி, உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் கி.சீனிவாசன், கோ.விஜயலட்சுமி ஆகியோர் பார்வையிட்டனர். இரண்டாம் கட்டப் பயிற்சி இம் மாதம் 24}ஆம் தேதி முதல் 5 நாள்கள் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com