ஜிஎஸ்டி விலக்குக் கோரி விசைத்தறியாளர்கள் மனிதச் சங்கிலி

ஜிஎஸ்டியிலிருந்து விலக்குக் கோரி அருப்புக்கோட்டையில் சிறு விசைத்தறித் துணி உற்பத்தியாளர்கள் மற்றும் நெசவாளர்கள் திங்கள்கிழமை மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினர்.

ஜிஎஸ்டியிலிருந்து விலக்குக் கோரி அருப்புக்கோட்டையில் சிறு விசைத்தறித் துணி உற்பத்தியாளர்கள் மற்றும் நெசவாளர்கள் திங்கள்கிழமை மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினர்.
ஜிஎஸ்டியால் தங்களின் வாழ்வாதாரமாம் பாதிக்கப்படுவதாக விசைத்தறி நெசவு மற்றும் துணி உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜிஎஸ்டியிலிருந்து முழுமையாக விலக்கு கோரி ஜூன்  27-ஆம் தேதியிலிருந்து 29ம் தேதி வரை 3  நாள்கள் அடையாள வேலைநிறுத்தம் நடத்தினர். கடந்த வெள்ளிக்கிழமை ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர் .உண்ணாவிரதத்தின் தொடர்ச்சியாக திங்கள் கிழமை மனிதச் சங்கிலி போராட்டத்தை நடத்தினர்.
இந்நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் எஸ்.எஸ்.கே.கணேசன் தலைமை வகித்தார். விசைத்தறியாளர்கள் மற்றும் நெசவாளர்கள் சுமார் 3000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆயிரங்கண் மாரியம்மன் கோயில், விருதுநகர் சாலை, புதிய பேருந்து நிலையம், நெசவாளர் காலனி  வழியாக வருவாய்க்  கோட்டாட்சியர் அலுவலகம் வரை மனித சங்கிலியாக நின்றனர். தொடர்ந்து கோட்டாட்சியரிடம்  மனு அளித்தனர். இந்தப் போராட்டம் காரணமாக சில பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com