வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிதியுதவி

சிவகாசி வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவியை மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் திங்கள் கிழமை வழங்கினார்.

சிவகாசி வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவியை மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் திங்கள் கிழமை வழங்கினார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில்     மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர் உதவி தொகை, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பொதுமக்கள் வழங்கினர்.
  இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.
முன்னதாக, வகாசி ராகவேந்திரா பயர் ஒர்க்ஸ்சில் 20.10.2016 அன்று நடைபெற்ற வெடி விபத்தின் போது அருகில் இருந்த தேவகி ஸ்கேன் சென்டரில் பணிபுரிந்த திருத்தங்கலைச் சேர்ந்த மருத்துவர் ஜானகிராம், வெம்பக்கோட்டை வட்டம், நதிக்குடியை சேர்ந்த பாஸ்கர், ஆனையூரை சேர்ந்த காமாட்சி மற்றும் புஷ்பலட்சுமி, சிவகாசியை சேர்ந்த வளர்மதி மற்றும் பத்மலதா, செங்கமலநாச்சியார்புரத்தை சேர்ந்த சொர்ணகுமாரி மற்றும் தேவி, சொக்கலிங்காபுரத்தை சேர்ந்த ராஜா முதலான 9 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் வீதம் ரூ.18 லட்சத்திற்க்கான காசோலைகளையும்,  காயமடைந்த 15 நபர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம்  ரூ.7.50 லட்சம் மதிப்பிலான காசோலைகளையும் ஆட்சியர் வழங்கினார்.
மேலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மூலம் 15 பயனாளிகளுக்கு ரூ.68,400 மதிப்பிலான இலவச சலவைப் பெட்டிகளையும் வழங்கினார்.
 இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துக்குமரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அன்புநாதன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) முருகேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் செந்தில் ஆறுமுகம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பார்த்திபன், உதவி ஆணையர் (கலால்) சங்கரநாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com