அரிமா சங்க நிர்வாகிகளுக்கு பயிற்சி முகாம்

சிவகாசி வட்டார அரிமா சங்கம் சார்பில், இந்த ஆண்டு பதவியேற்க உள்ள அரிமா சங்க நிர்வாகிகளுக்கு வட்டார அளவிலான பயிற்சி முகாம், திருத்தங்கலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சிவகாசி வட்டார அரிமா சங்கம் சார்பில், இந்த ஆண்டு பதவியேற்க உள்ள அரிமா சங்க நிர்வாகிகளுக்கு வட்டார அளவிலான பயிற்சி முகாம், திருத்தங்கலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
   இந் நிகழ்ச்சிக்கு, வட்டாரத் தலைவர் பி. ராஜேந்திரன் தலைமை வகித்தார். அரிமா சங்க முன்னாள் மாவட்ட ஆளுநர் எஸ். சுரேந்திரன், வட்டாரத் தலைவர் எஸ்.ஆர். தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.  கூட்டு மாவட்ட முன்னாள் தலைவர் ஆர். குருமூர்த்தி தனது சிறப்புரையில், அரிமா சங்க நிர்வாகிகளாக பதவியேற்பவர்கள் சங்கத்தை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதே இப்பயிற்சி முகாமின் நோக்கமாகும் என்றார்.
    முகாமில், விருதுநகர் அரிமா சங்க நிர்வாகி எம்.டி. சர்பராஜன், சிவகாசி தொழில் நகர் அரிமா சங்க நிர்வாகி ஏ. மகேந்திரன், சிவகாசி காஸ்மாஸ் அரிமா சங்க நிர்வாகி ஏ. சத்தியமூர்த்தி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
   இதில், அரிமா வட்டார சங்க நிர்வாகிகளும், பதவியேற்க உள்ள நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். முன்னதாக, திருத்தங்கல் அரிமா சங்கத் தலைவர் லட்சுமணன் வரவேற்றார். வட்டாரத் தலைவர் என். இளங்கோவன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com