அண்ணா பல்கலை. தரவரிசை: தென்தமிழகத்தில் ராம்கோ கல்லூரி முதலிடம்

அண்ணா பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் ராஜபாளையம் ராம்கோ பொறியியல் கல்லூரி நான்காம் இடமும், தென்தமிழகத்தில் முதல்

அண்ணா பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் ராஜபாளையம் ராம்கோ பொறியியல் கல்லூரி நான்காம் இடமும், தென்தமிழகத்தில் முதல் இடமும் பெற்றுள்ளது. இது குறித்து கல்லூரி முதல்வர் மகேந்திர கவுடா திங்கள்கிழமை கூறியதாவது:
2013-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ராம்கோ தொழில்நுட்பக் கல்லூரி அண்ணா பல்கலை தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்து முதல் ஐந்து இடங்களுக்குள் இடம் பிடித்து வருகிறது. அண்ணா பல்கலை. தனது உறுப்பு கல்லூரிகளுக்கான தேர்ச்சி சதவிகித அடிப்படையில் தரவரிசைப்பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் நவம்பர்- - டிசம்பர் 2016 தேர்வில் ராம்கோ பொறியியல் கல்லூரி 92.6 சதவீதம் பெற்று 506 பொறியியல் கல்லூரிகளில் 4ஆம் இடத்தையும், ஏப்ரல் மே 2016 தேர்வில் 93.25சதம் பெற்று 5ஆம் இடத்தையும் தென் தமிழகத்தில் முதலிடமும் பெற்று சாதனை புரிந்துள்ளது என்றார்.
இதற்கான பாராட்டு விழா கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரி நிர்வாகக்குழுவைச் சேர்ந்த செல்வராஜ், உதவி பேராசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் மகேந்திரகெளடா மற்றும் பேராசிரியர்களுக்கு ராம்கோ குழுமத் தலைவர் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா பாராட்டுத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com