ஆட்சியர் அலுவலகத்தில் தாய், மகள் தற்கொலை முயற்சி

ரூ. 3 லட்சம் மோசடி செய்தவரிடம் பணத்தை மீட்டுத் தர கோரி திங்கள்கிழமை விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் மகளுடன் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.

ரூ. 3 லட்சம் மோசடி செய்தவரிடம் பணத்தை மீட்டுத் தர கோரி திங்கள்கிழமை விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் மகளுடன் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.
அருப்புக்கோட்டை எம். ரெட்டியபட்டியை சேர்ந்த ராமராஜன் மனைவி மகேஸ்வரி(38). கணவர் உயிரிழந்து விட்டதால், ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்களுடன் வாழ்ந்து வருகிறார். கட்டட வேலை செய்து குழந்தைகளை காப்பாற்றி வந்த மகேஸ்வரி, முத்து வழிவிட்டான் என்பவரது வழி காட்டுதலால் அருப்புக்கோட்டையை சேர்ந்த முருகபாண்டியன் என்பவர் அறிமுகமாகினாராம். அவர், தலையாரி வேலை வாங்கி தருவதாக கூறினாராம். இதையடுத்து மகேஸ்வரி பலரிடம் கடன் வாங்கி முருகபாண்டியனிடம் ரூ. 3 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால், மூன்று ஆண்டுகள் கடந்தும் வேலை வாங்கித் தரவில்லையாம்.
இந்நிலையில், கடன் கொடுத்தவர்கள் மகேஸ்வரியிடம் பணம் கேட்டு தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளனர். இதனால், சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் அருப்பு க்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உதவியாளராக வேலை செய்து வந்துள்ளார். மகள், பாட்டி வீட்டிலும் மகன்கள் விடுதிகளிலும் தங்கி படித்து வந்துள்ளனர். வேலைக்காக பணம் பெற்று ஏமாற்றியவர் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தி டம் ஏற்கனவே மனு அளித்துள்ளார்.
ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மகள் கார்த்தீஸ்வரியுடன் வந்த மகேஸ்வரி பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அவரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மதுபான கடைக்கு எதிர்ப்பு: சிவகாசி நாரணாபுரத்தைச் சேர்ந்தோர் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் கிராமத்தில் சுமார் மூவாயிரம் குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இங்கிருந்த மதுபான கடை நீதிமன்ற உத்தரவு காரணமாக முதலிபட்டி பகுதிக்கு மாற்றப்பட்டது. ஆனால் தனியார் மதுக்கடை இயங்கி வருகிறது.
மேலும் நாரணாபுரம்- அனுப்பன் குளம் சாலையில் மதுக் கடை அமைக்க அலுவலர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி நாரணாபுரம் பகுதியில் அரசு மதுபான கடை திறப்பதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com