ஜி.கே.வாசன் நாளை சிவகாசி வருகை

சிவகாசிக்கு செவ்வாய்க்கிழமை தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வர உள்ளதாக அக்கட்சியின் விருதுநகர் தெற்கு மாவட்டத்தலைவர் ஜி.வி.கார்த்திக் தெரிவித்துள்ளார்.

சிவகாசிக்கு செவ்வாய்க்கிழமை தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வர உள்ளதாக அக்கட்சியின் விருதுநகர் தெற்கு மாவட்டத்தலைவர் ஜி.வி.கார்த்திக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: சிவகாசி அரசன் கணேசன் திருமண மண்டபத்தில் தமாகா விருதுநகர் மாவட்ட வடக்கு, தெற்கு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் ஜி.கே.வாசன் கலந்து கொள்கிறார். இக்கூட்டத்தில் மாவட்ட, நகர,வட்டார, இளைஞர் அணியினரும் தொண்டர்களும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com