ரமணா வித்யாலயா மாணவிகள் 3 பேர் 498 மதிப்பெண்
By DIN | Published on : 20th May 2017 06:34 AM | அ+அ அ- |
ராஜபாளையம் ரமணா வித்யாலயா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு பயின்ற, பத்மபிரியா, அனுஷா, உதய தர்ஷிணி ஆகிய 3 மாணவிகள் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 498 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். மாணவிகள் ஆர்.பூர்ணிமா, எஸ்.குருதர்ஷினி 497 மதிப்பெண்களும், டி.சுமதி அன்புமலர் 496 மதிப்பெண்ணும் எடுத்துள்ளனர்.
மாணவிகளை பள்ளித்தலைவர் கண்ணன், தாளாளர் கிருஷ்ணவேணி கண்ணன், தலைமை ஆசிரியர் ரேணுகா, ஆலோசகர் டாக்டர் கு.கணேசன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.