அருப்புக்கோட்டையில் ஸ்ரீசெளடாம்பிகை அம்மன் வீதி உலா

அருப்புக்கோட்டை ஸ்ரீசெளடாம்பிகை அம்மன் கோயில் பொங்கல் திருவிழாவில் வியாழக்கிழமை இரவு அம்மன் வீதி உலா நடைபெற்றது.

அருப்புக்கோட்டை ஸ்ரீசெளடாம்பிகை அம்மன் கோயில் பொங்கல் திருவிழாவில் வியாழக்கிழமை இரவு அம்மன் வீதி உலா நடைபெற்றது.
அருப்புக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே தெற்குத்தெரு பகுதியில் ஸ்ரீசெளடாம்பிகை அம்மன் திருக்கோயில் உள்ளது. இத்திருக்கோயிலில் கடந்த 9-ஆம் தேதி கொடியேற்றத்துடன் பொங்கல் விழா தொடங்கியது. விழாவின் 8-ஆம் நாளில் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் வாழவந்தம்மன் கோயிலிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் பூசாரி சக்தி கரகம் எடுத்து வந்தார்.
விரதமிருந்த இளைஞர்கள் பக்திப் பரவசத்துடன் கத்தியால் தங்கள் உடலைக் கீறி நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் விழா நடைபெறும் கோயிலையொட்டி சக்தி கரகம் நிலை நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து பத்தாம் நாளான வியாழக்கிழமை இரவு ஸ்ரீசெளடாம்பிகை அம்மன் சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ண பட்டாடையில், காளை வாகனத்தில் வீதி உலா வந்தார். அம்மனுக்கு முன்பாக பெண்கள் முளைப்பாரி எடுத்தும், இளைஞர்கள் சிலம்பாட்டம், வாள்வீச்சு, தீப்பந்த சிலம்பாட்டங்களுடன் ஊர்வலமாகச் சென்றனர்.
வீடுவீடாக பக்தர்கள் பூமாலை, பட்டு, மாவிளக்கு, தேங்காய், பழம் ஆகியவற்றை அம்மனுக்குப் படைத்து வழிபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com