எஸ்எஸ்எல்சி தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற சிவகாசி பள்ளிகள்

எஸ்எஸ்எஸ்சி தேர்வில் பல சிவகாசி பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

எஸ்எஸ்எஸ்சி தேர்வில் பல சிவகாசி பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
சிவகாசி ஜேஸீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிய 68 மாணவர்களுக்கும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த மாணவர்களை பள்ளித்தலைவர் அசோகன், தாளாளர் வேம்பார், முதல்வர் சித்ராஜெயந்தி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.
வி.எஸ்.கே.டி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிய 69 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த மாணவர்களை முதல்வர் சாரதா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். அரிமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிய 83 மாணவர்களுக்கும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த மாணவர்களை தாளாளர் பிரபாகரன், முதல்வர் அய்யாவுதங்கமணி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
விநாயகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிய 78 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த மாணவர்களை முதல்வர் நாகேந்திரன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.
காமராஜ் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிய 75 மாணவர்கள், காரனேசன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிய 177 மாணவிகள், கம்மவார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிய 74 மாணவர்கள், விளாம்பட்டி ஏ.வி.எம். மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிய 229 மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவீத வெற்றியைப் பெற்றுள்ளனர். சிவகாசி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிய 500 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகளை தாளாளர் ராமமூர்த்தி, தலைமை ஆசிரியை தனுஜா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com