சிவகாசி, இருக்கன்குடியில் மே 20 மின்தடை ஏற்படும் பகுதிகள்

சிவகாசி மற்றும் இருக்கன்குடியில் சனிக்கிழமை (மே 20) மின்தடை ஏற்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் ஆர்.செல்வம் தெரிவித்துள்ளார்.

சிவகாசி மற்றும் இருக்கன்குடியில் சனிக்கிழமை (மே 20) மின்தடை ஏற்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் ஆர்.செல்வம் தெரிவித்துள்ளார்.
   இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
 சிவகாசி சுற்றுப்பகுதிகள் மற்றும் இருக்கன்குடி துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை நடைபெற உள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பாரைப்பட்டி துணை மின் நிலையப் பகுதிகளான பாரைப்பட்டி, பள்ளபட்டி, விஸ்வநத்தம், மாரியம்மன் கோயில் பகுதி, ஜக்கம்மாள் கோயில் பகுதி, பேருந்து நிலையப் பகுதி, நாரணாபுரம் சாலை, திருத்தங்கல் துணை மின்நிலையத்தைச் சேர்ந்த திருத்தங்கல், செங்கமலநாச்சியார்புரம், கீழத்திருத்தங்கல், ஸ்டேட் பேங்காலனி, சாரதா நகர், பூவநாதபுரம், வடபட்டி, நடுவப்பட்டி, ஈஞ்சார், தேவர்குளம், சுக்கிரவார்பட்டி துணை மின்நிலையத்தைச் சேர்ந்த சுக்கிரவார்பட்டி, அதிவீரன்பட்டி, நமஸ்கரித்தான்பட்டி, சாணார்பட்டி, செவல்பட்டி துணை மின்நிலையத்தைச் சேர்ந்த செவல்பட்டி, அப்பையநாயக்கன்பட்டி, மூர்த்திநாயக்கன்பட்டி, குகன்பாறை, இனாம் மீனாட்சிபுரம், சக்கம்மாள்புரம், அம்மையார்பட்டி, துலுக்கன்குறிச்சி, வெம்பக்கோட்டை துணை மின்நிலையத்தைச் சேர்ந்த வெம்பக்கோட்டை, சூரார்பட்டி, கோட்டைப்பட்டி, சல்வார்பட்டி, கே.மடத்துப்பட்டி, தாயில்பட்டி, விஜய்கரிசல்குளம், பனையடிபட்டி, சங்கரபாண்டியபுரம், சிவகாசி நகர் துணை மின்நிலையத்தைச் சேர்ந்த கண்ணாநகர், காரனேசன்காலனி, பழனியாண்டவர்புரம் காலனி, நேரு சாலை, பராசக்தி காலனி, வடக்கு ரதவீதி, வேலாயுதம் சாலை, அண்ணா காலனி, சாட்சியாபுரம் துணை மின்நிலையத்தைச் சேர்ந்த சாட்சியாபுரம், ரிசர்வ்லைன், தொழில்பேட்டை, போலீஸ் காலனி, ஆணையூர், விளாம்பட்டி, இ.பி.காலனி, ஹவுசிங் போர்டு, விஸ்வம் நகர், அய்யப்பன் காலனி, அய்யனார் காலனி, சசிநகர், சித்துராஜபுரம், நென்மேனி துணை மின்நிலையத்தைச் சேர்ந்த நென்மேனி, இருக்கன்குடி, கோசுக்குண்டு, என்.மேட்டுப்பட்டி மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்திவைக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com