சர்வதேச ஸ்கேட்டிங்: மாணவி சாதனை

சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஏழாயிரம் பண்ணை மாணவிக்கு ஏராளமானோர் பாராட்டு தெரிவித்தனர்.

சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஏழாயிரம் பண்ணை மாணவிக்கு ஏராளமானோர் பாராட்டு தெரிவித்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள ஏழாயிரம்பண்ணை கிராமத்தைச் சேர்ந்த மீன்ராஜ், ஜெயந்தி தம்பதியின் மகள் சுபஸ்ரீ. தனியார் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வரும் இவர்,கடந்த மே 12 ஆம் தேதி முதல் மே 14 ஆம் தேதி வரை மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச மாணவர் ஒலிம்பிக் ஸ்கேட்டிங் போட்டியில் தமிழ்நாடு மாணவர் ஒலிம்பிக் சங்கம் மற்றும் இந்தியா சார்பில் கலந்து கொண்டார். எட்டு நாடுகள் கலந்து கொண்ட இப்போட்டியில், ரிங்-5, ரிங்-6 பிரிவுகளில் 14 மற்றும் 17 வயதுக்கு உள்ட்டோருக்கான போட்டிகளில் 500 மீட்டர் தூரத்தை 56.8 வினாடிகளிலிலும், 1000 மீட்டர் தூரத்தை 120 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றுள்ளார். சாதனை படைத்த மாணவி சுபஸ்ரீயை ஏழாயிரம்பண்ணை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பாராட்டினர்.
தனது வெற்றி குறித்து அவர் கூறுகையில், ஸ்கேட்டிங் விளையாட்டு விருதுநகர் போன்ற பின்தங்கிய மாவட்டத்திலும் பிரபலம் அடைந்துவருவதால் தடகளம் போன்ற பிற விளையாட்டுகளுக்கு முக்கியதுவம் கொடுப்பது போலவே, ஸ்கேட்டிங் விளையாட்டிற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். 2020 ஒலிம்பிக் போட்டியில் ஸ்கேட்டிங் விளையாட்டு சேர்க்கப்படுவது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com