பாளையம்பட்டி அருகே நீரோடையில் கழிவுநீர் தேக்கம் கொசுக்கடியால் மக்கள் அவதி

அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி ராகவேந்திரா நகரில் மழைநீர் ஓடையில் கழிவுநீருடன் குப்பைகள் கலப்பதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது

அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி ராகவேந்திரா நகரில் மழைநீர் ஓடையில் கழிவுநீருடன் குப்பைகள் கலப்பதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
பாளையம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட ஒன்றாவது வார்டு பகுதியில் அமைந்துள்ளது ராகவேந்திரா நகர். சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இப்பகுதியில் அருப்புக்கோட்டை-மதுரை சாலையை ஒட்டிய மேற்குக்கரையில் மழைநீர் ஓடை செல்கிறது.
இந்த ஓடையில் மொத்தமாகச் செடிகள் வளர்ந்துள்ளதாலும், குப்பைகள் அடைத்துக் கொள்வதாலும், தெருக்களிலிருந்து வரும் கழிவுநீர் சேர்ந்து ஓடையில் ஆங்காங்கே கழிவுநீர் குட்டையாகத் தேங்கி விடுகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாவதோடு, துர்நாற்றமும் வீசுகிறது. மேலும் இங்குள்ள தெருக்களில் கோடை காலம், மழைக்காலம் என எப்போதுமே கொசுத் தொல்லை அதிகம் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஊராட்சி சார்பில் கொசுப்புழுவை ஒழிப்பதற்காக வீடு வீடாகச் சோதனை செய்வது மட்டும் போதாதென்றும், நீரோடையில் கழிவுநீர் தேங்காத வண்ணம் சீரமைக்க வேண்டுமெனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக பாளையம்பட்டி ஊராட்சி அலுவலக தரப்பில் கேட்டபோது, ஏற்கெனவே அந்த ஓடையில் இருந்த சீமைக்கருவேல மரங்களை நீக்கி விட்டதாகவும், கழிவுநீர் தேங்குவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் பதிலளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com