சிவகாசி பொறியியல் கல்லூரியில் சர்வதேச மாநாடு

தேசிய தொழில்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் கணிப்பொறியியல் துறை, கட்டடவியல் துறை ஆகியன இணைந்து, விஞ்ஞானம்,

தேசிய தொழில்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் கணிப்பொறியியல் துறை, கட்டடவியல் துறை ஆகியன இணைந்து, விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மைத் துறைகளில் புதிய கண்டுபிடிப்புகள் என்ற தலைப்பில் சர்வதேச மாநாட்டை வெள்ளிக்கிழமை நடத்தின.
இந் நிகழ்ச்சிக்கு, தாளாளர் ஆர். சோலைச்சாமி தலைமை வகித்தார்.
விருதுநகர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன், கல்லூரி முதல்வர் கே. சுப்பிரமணியன், டீன் பி. மாரிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், தேசிய தொழில்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் சந்திரநாத் பாண்டே, மாநாட்டை தொடக்கிவைத்துப் பேசியதாவது:
புதிய கண்டுபிடிப்புகள் சமுதாயத்துக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும். அறிவியலும், தொழில்நுட்பமும் இணைந்த வளர்ச்சியே சிறந்த வளர்ச்சியாகும். ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும். மாணவர்கள் ஆர்வத்துடன் கல்வி கற்று, புதிய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். 
இதுபோன்ற கருத்தரங்குகளில் பகிர்ந்து கொள்ளப்படும் கருத்துகளால் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்கும். புதிய கண்டுபிடிப்புக்கள் உலக அரங்கில் இந்தியாவை பெருமைப்படுத்த வேண்டும் என்றார்.
தேசிய தொழில்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர்கள் ஜி. ஜனார்த்தனன், வி. சண்முகநீதி, தினேஷ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 
இந்த மாநாட்டில், பூடான், ஈராக், ஓமன், ரஷ்யா உள்ளிட்ட 24 நாடுகளைச் சேர்ந்த 46 ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர். மேலும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 105 ஆராய்ச்சியாளர்கள் கலந்துகொண்டனர். இதில், கணிப்பொறியியல் துறை, கட்டடவியல் துறை ஆகியவற்றைச் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
ஆய்வுக் கட்டுரை தொகுப்பினை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன் வெளியிட, தேசிய தொழில்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் சந்திரநாத் பாண்டே பெற்றுக்கொண்டார்.
மாணவ, மாணவிகளின் கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக, பேராசிரியர் என். சாகுல்ஹமீது வரவேற்றார்.
பேராசிரியர் ரூபா சவுந்தரி நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com