விவசாயிகளுக்கான பயிர்க் காப்பீடு திட்டங்கள் தெருக்கூத்து மூலம் விழிப்புணர்வு

விருதுநகர் மாவட்ட கிராமங்களில் விவசாயிகளுக்கான பயிர்க் காப்பீட்டுத் திட்டங்கள் மற்றும் மானாவாரி தொகுப்பு நில மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து, தெருக்கூத்து

விருதுநகர் மாவட்ட கிராமங்களில் விவசாயிகளுக்கான பயிர்க் காப்பீட்டுத் திட்டங்கள் மற்றும் மானாவாரி தொகுப்பு நில மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து, தெருக்கூத்து மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.
பரளச்சி மற்றும் ம.ரெட்டியபட்டி ஆகிய கிராமங்களில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில், நெற்பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.281 வீதம் செலுத்தி காப்பீட்டுத் திட்டத்தில் சேருவது குறித்தும், மானாவாரி தொகுப்பு நில மேம்பாட்டுத் திட்டத்தில் சேருவதன் மூலம் குழுக்கள் அமைத்து, விவசாயிகள் தங்களுக்குத் தேவையான பயிற்சிகள், வேளாண் இடுபொருள்கள், கருவிகள் பெற்று கூட்டுப் பண்ணையம் மூலம் பயன்பெறவும் விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், நீர் சேமிப்பு, நீர் பயன்பாடு குறித்த பயிற்சிகளும், சொட்டு நீர்ப்பாசனம், தெளிப்பு நீர்ப்பாசனம் மற்றும் மழைத்தூவான் அமைப்பது பற்றியும், பண்ணைக்குட்டைகள் அமைத்து உரிய பயிற்சிகளுடன் பயன்பெறுவது பற்றியும் தெருக்கூத்து மூலம் விவசாயிகளுக்கு எளிய முறையில் விளக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ரெட்டியபட்டி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தின் வேளாண்மை அலுவலர் சந்திரகலா, வேளாண்மை உதவி அலுவலர் சின்னச்சாமி மற்றும் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com