அங்கன்வாடி மையம் அருகே சுகாதாரச் சீர்கேடு

சாத்தூரில்  அங்கன்வாடி மையம் முன்பாக சுகாதாரச் சீர்கேடு நிலவுவதால், அதை வேறு இடத்துக்கு மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

சாத்தூரில்  அங்கன்வாடி மையம் முன்பாக சுகாதாரச் சீர்கேடு நிலவுவதால், அதை வேறு இடத்துக்கு மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் 7 ஆவது வார்டு வெள்ளைகரை சாலையில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் இப் பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்த அங்கன்வாடி மையத்துக்குச் செல்லும் பாதையின் இருபுறமும் வாருகால் செல்கிறது.
நகராட்சி நிர்வாகம் சார்பில், இந்த வாருகால் முறையாக சுத்தம் செய்யப்படாததால், அதிலிருந்து கழிவுநீர் நிரம்பி வழிந்து அங்கன்வாடி மையத்தின் வாசலில் தேங்கி நிற்கிறது. மேலும், அங்கன்வாடி மையத்தின் அருகே குப்பைகளும் கொட்டப்படுகின்றன. இந்த குப்பைகளையும் நகராட்சி சார்பில் முறையாக சுத்தம் செய்து அகற்றுவதில்லை.
 இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரச் சீர்கேட்டால் அங்கன்வாடி குழந்தைகள் மர்மக் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால், அங்கன்வாடி மையத்துக்கு தங்களின் குழந்தைகளை அனுப்புவதற்கு பெற்றோர்கள் தயங்கி வருகின்றனர். 
எனவே, குழந்தைகளின் நலன் கருதி அங்கன்வாடி மையம் அருகிலுள்ள வாருகாலை தினமும் சுத்தப்படுத்தி, குப்பைகளையும் அகற்ற வேண்டும். இல்லையெனில், அங்கன்வாடி மையத்தை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என, குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கோகாரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com