நிலம் கையகப்படுத்தியதில் உரிய பணம் வழங்காததால் கோட்டாட்சியர் ஜீப் ஜப்தி

நிலம் கையகப்படுத்தியதில் உரிய பணம் வழங்காததால் நீதிமன்ற உத்தரவின்பேரில், சிவகாசி வருவாய் கோட்டாட்சியரின் ஜீப் திங்கள்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.

நிலம் கையகப்படுத்தியதில் உரிய பணம் வழங்காததால் நீதிமன்ற உத்தரவின்பேரில், சிவகாசி வருவாய் கோட்டாட்சியரின் ஜீப் திங்கள்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.

சிவகாசியில் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு கட்டுவதற்காக 1988 ஆம் ஆண்டு அரசு நிலம் கையகப்படுத்தியது. அப்போது, காமராஜ் மகன் சம்பந்தம் உள்ளிட்ட 8 பேருக்கு ரூ. 20 லட்சம் நிலம் எடுப்புத் தொகை வழங்கப்படவில்லையாம்.     இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். 

பின்னர், இந்த வழக்கு 2016ஆம் ஆண்டு சிவகாசி சார்பு-நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.  தற்போது வரை நிலம் வழங்கியவர்களுக்கு உரிய பணம் கொடுக்காததால், சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் தினகரன் பயன்படுத்தும் ஜீப்பை ஜப்தி செய்ய நீதிபதி ஹேமா உத்தரவிட்டார். 

அதன்பேரில்,  நீதிமன்ற ஊழியர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நின்று கொண்டிருந்த ஜீப்பை ஜப்தி செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com