மம்சாபுரம் பேரூராட்சியை கண்டித்து காத்திருப்புப் போராட்டம் 

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மம்சாபுரம் பேரூராட்சியில் குடிநீர் இணைப்புக்கு அரசு நிர்ணயித்த தொகையை விட கூடுதலாக வசூல் செய்யப்படுவதைக் கண்டித்து

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மம்சாபுரம் பேரூராட்சியில் குடிநீர் இணைப்புக்கு அரசு நிர்ணயித்த தொகையை விட கூடுதலாக வசூல் செய்யப்படுவதைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.
மம்சாபுரம் பேரூராட்சியில் குடிநீர் இணைப்புக்கு அரசு 
நிர்ணயித்த தொகையை விட கூடுதலாக 5 மடங்கு வசூல் 
செய்யும் செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், புதிய குடிநீர் இணைப்பு கேட்டு மனு செய்தவர்களுக்கு பேரூராட்சி நிர்ணயம் செய்த கட்டணத்தில் இணைப்பு வழங்கக் கோரியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம்,  மம்சாபுரம் பேருராட்சி கிளை சார்பில் பேரூராட்சி அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.இப் போராட்டத்துக்கு, எஸ்.செந்தட்டிகாளை தலைமை வகித்தார். கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் கே. இசக்கி போராட்டத்தைத் தொடக்கி வைத்தார். கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் எம். திருமலை, ஒன்றியச் செயலர் எஸ்.வி. சசிகுமார், நகரச் செயலர் ஐ.ஆர். கணேசன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் டி. பெருமாள், அங்கம்மாள் ஆகியோர் போராட்டத்தை விளக்கிப் பேசினர்.
இதைத் தொடர்ந்து, பேருராட்சி அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், வரும் காலங்களில் புதிய குடிநீர் இணைப்புக்கு பதிவுக் கட்டணம்,  வைப்பு கட்டணத் தொகை, சாலை பழுது கட்டணம் உள்பட மொத்தத் தொகை  ரூ. 6,014 மட்டும் செலுத்தினால் போதும். கூடுதலாகப் பணம் செலுத்த தேவையில்லை. அத்தொகையை, வங்கி வரைவோலையாகவோ அல்லது ரொக்கமாகவோ அலுவலக நேரமான காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இளநிலை உதவியாளரிடம் செலுத்தி, உரிய ரசீதை பெற்றுக் கொள்ளலாம். 
இணைப்பு யார் பெயரில் கேட்கிறார்களோ அவர்கள் 
அலுவலகத்துக்கு நேரில் வந்து பணம் செலுத்த வேண்டும். 
தனிநபர் யாரிடமும் பணம் செலுத்தக் கூடாது என பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com