விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் மரணம்: நீதித்துறை நடுவர் நேரில் ஆய்வு

அருப்புக்கோட்டையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் காவல் நிலையத்தில் மர்ம மரணம் அடைந்தது தொடர்பாக,  மாவட்ட நீதித் துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி திங்கள்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.  

அருப்புக்கோட்டையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் காவல் நிலையத்தில் மர்ம மரணம் அடைந்தது தொடர்பாக,  மாவட்ட நீதித் துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி திங்கள்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.  
        அருப்புக்கோட்டை அருகே சுக்கிலநத்தம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் மலைச்சாமி(23). இவர், மது போதையில் இவரது பாட்டியை அடிக்கடி துன்புறுத்தியதாக வந்த புகாரின் அடிப்படையில், மலைச்சாமியை  தாலுகா காவல் நிலைய சார்பு-ஆய்வாளர் கெளதம் விஜய்  ஞாயிற்றுக்கிழமை விசாரணைக்காக அழைத்துச் சென்றார். ஆனால், அன்று  மாலை காவல் நிலையத்திலேயே இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக, அவரது உறவினர்களுக்கு காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
    ஆனால், இளைஞர் சாவில் மர்மம் இருப்பதாக, அவரது உறவினர்கள் மாவட்ட  மனித உரிமையியல் குழுவில் புகார் செய்தனர். இதனடிப்படையில், திங்கள்கிழமை மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்ற (எண்-1) நீதிபதி மும்தாஜ் (பொறுப்பு) , அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு நேரில் ஆய்வு மேற்கொள்ள வந்தார். அப்போது, மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதி முன்னிலையில், பிரேதப் பரிசோதனைக் கூடத்திலிருந்த மலைச்சாமியின் சடலத்தை நேரில் பார்த்து ஆய்வு மேற்கொண்டு விசாரணை செய்தார். மேலும், இறந்த மலைச்சாமியின் பாட்டி மாரியம்மாள், தாய்மாமன் பூமிநாதன் மற்றும்றவினர்கள் சோலையம்மாள், அம்பிகா, வரதராஜன் ஆகிய 5 பேரிடமும், அங்கேயே  நீதிபதி மும்தாஜ்  விசாரணை செய்தார். 
      அதையடுத்து, பிரேதப் பரிசோதனை முடிந்ததும், காவல் துறையினர் பிற்பகல் 3 மணிக்கு மலைச்சாமியின் சடலத்தை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். பிரேதப் பரிசோதனை ஆய்வறிக்கையின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படும் என, காவல் துறையினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com