மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம்
By DIN | Published on : 15th November 2017 08:49 AM | அ+அ அ- |
சிவகாசி மத்திய சுழற்சங்கம், அழகன் சேவா சங்கம் ஆகியன இணைந்து,
மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாமை செவ்வாய்க்கிழமை நடத்தின.
அழகன் காப்பக வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, பி. வேம்பார் தலைமை வகித்தார். மருத்துவர் எஸ்.பி. ஜெய்சங்கர், மனவளர்ச்சி குன்றிய 63 குழந்தைகளுக்கு காந்த சிகிச்சை, அக்குபஞ்சர் சிகிச்சை அளித்தார்.
தொழிலதிபர் பி.ஜி. சுரேஷ் மருந்து மற்றும் மாத்திரைகளை வழங்கினார். இதில், சங்க நிர்வாகிகள் கதிரேசன், சுரேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.