தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள்: எம்.எல்.ஏ. ஆய்வு

சாத்தூர் அருகே தாமிரபரணி கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணிகளை, அருப்புக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் செவ்வாய்கிழமை நேரில் ஆய்வு நடத்தினார்.

சாத்தூர் அருகே தாமிரபரணி கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணிகளை, அருப்புக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் செவ்வாய்கிழமை நேரில் ஆய்வு நடத்தினார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளான அருப்புக்கோட்டை சட்டபேரவைத் தொகுதிக்குள்பட்ட என்.வெங்கடேசபுரம், பட்டி, துரைச்சாமிபுரம், கலிங்கபட்டி, நள்ளிசத்திரம், குமாரபுரம், கஞ்சம்பட்டி, வடக்கு தோட்டுலோவன்பட்டி,சிவனைந்தபுரம், மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தாமிரபரணி கூட்டுக்
குடிநீர்த் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை கே.கே.எஸ்.எஸ்.ஆர்.
ராமசந்திரன் நேரில் ஆய்வு செய்தார்.
     அப்போது அவர் கூறுகையில், கடந்த 2011 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணிகள் தடைபட்டுள்ளன. தற்போது, அந்தப் பணிகள் மீண்டும் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. இதேபோன்று, இருக்கன்குடி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் இந்தப் பகுதியில் உள்ள 99 கிராமங்கள் சேர்க்கப்படவில்லை.
      அந்த கிராமங்கள் அனைத்தும் தாமிரபரணி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. தற்போது 755 கிராமங்கள் பயன்பெறும் வகையில் சுமார் ரூ. 284 கோடி மதிப்பில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
      இந்தப் பணிகளை ஆய்வு செய்த எம்.எல்.ஏ., பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டார்.
     ஆய்வின்போது, திமுக சாத்தூர் நகரச் செயலர் குருசாமி, ஒன்றியச் செயலர்கள் சரவணன், முருகேசன் மற்றும்  நகர, ஒன்றிய நிர்வாகிகளும், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளும், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும் என ஏராளமானோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com