ராஜபாளையத்தில் அரிசி ஆலைக்கு சீல்

ராஜபாளையம் தனியார் அரிசி ஆலையில், ரேஷன் அரிசியை வாங்கி மாவாக்கி கள்ளச்சந்தையில் விற்பதை அடுத்து, அந்த ஆலைக்கு திங்கள்கிழமை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

ராஜபாளையம் தனியார் அரிசி ஆலையில், ரேஷன் அரிசியை வாங்கி மாவாக்கி கள்ளச்சந்தையில் விற்பதை அடுத்து, அந்த ஆலைக்கு திங்கள்கிழமை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
      ராஜபாளையம் தனியார் அரிசி ஆலையில் ரேஷன் அரிசியை வாங்கி மாவாக்கி, கள்ளச்சந்தையில் விற்று வருவதாக, அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது. அதனடிப்படையில், ராஜபாளையம் வட்டாட்சியர்  சரவணன் தலைமையில், குடிமைப் பொருள் தனிவட்டாட்சியர் சீனிவாசன், வருவாய் ஆய்வாளர் சுந்தரராஜ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் இருவர் என தனிப்படை அமைத்து, திங்கள்கிழமை அந்த ஆலையில் ஆய்வு செய்தனர்.
   அப்போது,  ராஜபாளையம்-சங்கரன்கோவில் முக்குப் பகுதியில் செயல்படும் அந்த அரிசி ஆலையில் 3 சாக்குப் பைகளில் 95 கிலோ ரேஷன் அரிசியை மாவாக்க தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததை கைப்பற்றி, அரசு கிட்டங்கியில் ஒப்படைத்தனர். அதையடுத்து, வட்டாட்சியர்  உத்தரவுப்படி அரிசி ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com