ராஜபாளையம் பள்ளி மாணவர்கள் இளம் விஞ்ஞானியாக தேர்வு

விருதுநகரில் நடைபெற்ற மாநில அளவிலான 25 ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாட்டில், ராஜபாளையம் கேசா டி மிர் மெட்ரிக். பள்ளி மாணவர்கள் இளம் விஞ்ஞானியாகத்  தேர்வு பெற்றுள்ளனர்.

விருதுநகரில் நடைபெற்ற மாநில அளவிலான 25 ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாட்டில், ராஜபாளையம் கேசா டி மிர் மெட்ரிக். பள்ளி மாணவர்கள் இளம் விஞ்ஞானியாகத்  தேர்வு பெற்றுள்ளனர்.
     இந்த மாநாட்டில், தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இருந்து 229 குழுக்கள் கலந்துகொண்டு சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரைகளில், ராஜபாளையம் கேசா டி மிர் பள்ளியைச் சார்ந்த  மாணவர்கள் ஜேன் ராஜசெல்வம், அப்சானா, அஸ்வந்திகா, மதுநிஷா, கிருத்திகா ஆகியோர் அடங்கிய குழு தேர்வு செய்யப்பட்டது.
      ஆசிரியை மாலா  வழிக்காட்டுதலுடன், தேங்காய் நார்த் தூளைப் பயன்படுத்தி உரம் தயாரித்து மண்ணின் வளத்தை மேம்படுத்தல் என்ற தலைப்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை சிறந்ததாகத்  தேர்வு செய்யப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட மாணவர்களையும்,  வழிகாட்டி ஆசிரியையும், பள்ளித் தாளாளர் திருப்பதிசெல்வன், முதுநிலை முதல்வர்அருணா திருப்பதி செல்வன்,
 முதல்வர் செல்வக்குமார் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோர் செவ்வாய்க்கிழமை பாராட்டி வாழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com