விருதுநகரில் நேரு பிறந்த நாள் விழா

 விருதுநகர் தேசபந்து மைதானத்தில், மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் 128 ஆவது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

 விருதுநகர் தேசபந்து மைதானத்தில், மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் 128 ஆவது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
     இதில், காங்கிரஸ் கட்சியின் செயலரும், விருதுநகர் மக்களவைத் தொகுதியின் முன்னாள் உறுப்பினருமான மாணிக்கம் தாகூர் கலந்துகொண்டு, நேரு படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
     அப்போது அவர் கூறுகையில்,  ராகுல் காந்தியின் தொடர் போராட்டம் காரணமாக ஜிஎஸ்டி.யில் 100-க்கும் மேற்பட்ட பொருள்களுக்கு வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழிலுக்கு 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக வரியை குறைத்துள்ளனர். இதை, 12 சதவீதமாகக் குறைக்க வேண்டும். அதேபோல், விருதுநகர் மாவட்டத்தில் கைவினை சார்ந்த தொழில்களுக்கு முழு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்றார்.
     அப்போது, விருதுநகர் மக்களவைத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சி சுந்தரம், நகரத் தலைவர் வெயில்முத்து மற்றும் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள், தொண்டர்கள் பலர் உடனிருந்தனர்.    
அருப்புக்கோட்டை சந்திரா நேஷனல் பள்ளி: இப்பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை குழந்தைகள் தின விழா கொண்டாடப்ப
ட்டது. இந்நிகழ்ச்சிக்கு, பள்ளிச் செயலர் பி.சி. சரவணன் தலைமை வகித்துப் பேசினார். பள்ளி முதல்வர் கனிமொழி மாணவ, மாணவியரிடையே குழந்தைகள் தின விழா வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார். நேரு வேடமணிந்த மாணவ, மாணவியர் மேடையில் தோன்ற, ஆசிரியர்கள்  சிறப்புப் பாடல்கள் பாடினர்.
பின்னர், மாணவர்களின் குழு நடனமும் நடைபெற்றது. அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com