பட்டாசு பாதுகாப்புப் பயிற்சியால் இந்த ஆண்டு விபத்து பெருமளவு குறைந்துள்ளது: அதிகாரி

பட்டாசு பாதுகாப்புப் பயிற்சியினாலும், பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்களினாலும், இந்த ஆண்டு பட்டாசு ஆலைகளில் பெருமளவு விபத்து

பட்டாசு பாதுகாப்புப் பயிற்சியினாலும், பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்களினாலும், இந்த ஆண்டு பட்டாசு ஆலைகளில் பெருமளவு விபத்து குறைந்துள்ளதாக, சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை துணை முதன்மை அதிகாரி கி. சுந்தரேசன் தெரிவித்துள்ளார்.  
      இது குறித்து அவர் செவ்வாய்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 870 பட்டாசு ஆலைகள் உள்ளன. இதில், நேரடியாக சுமார் 1.50 லட்சம் பேர் வேலை செய்து வருகின்றனர். ஒவ்வொரு ஆலையிலும் கண்காணிப்பாளர், போர்மென் உள்ளிட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
    தமிழ்நாடு அரசு, பட்டாசுத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்புப் பயிற்சி மையம் அமைத்து, அதில் இணை இயக்குநர் அளவில் அதிகாரியை நியமித்து, பட்டாசு ஆலை போர்மென்கள், கண்காணிப்பாளர், மேலாளர் மற்றும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி அளித்து வருகிறது. இதன்மூலம், இதுவரை சுமார் 25 தொகுதி பயிற்சி வகுப்புகள் நடைபெற்றுள்ளன.
     வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள், பட்டாசு ஆலைகளில் அடிக்கடி ஆய்வு செய்து குறைகளை நிவர்த்தி செய்யும்படி அறிவுறுத்தி வந்தனர். விதியை மீறி செயல்பட்ட பட்டாசு ஆலைகளில் வேலை செய்யும் போர்மென், கண்காணிப்பாளர், மேலாளர் மற்றும் அனைத்துத் தொழிலாளர்களுக்கு உரிய பயிற்சியும், அறிவுரையும் வழங்கப்பட்டு வருகிறது.
    மாவட்ட வருவாய்த்துறையினர் 4 குழுக்களை அமைத்து, பட்டாசு ஆலைகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதில், குறைபாடுள்ள ஆலைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதையடுத்து, அந்த ஆலைகளில் குறைபாடுகள் நீக்கப்பட்டன. பட்டாசு ஆலை உரிமையாளர்கள் சங்கத்தினர், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம்களை நடத்தினர்.
    இதுபோன்ற பல நடவடிக்கைகளால் 2016-2017 ஆம் தீபாவளி ஆண்டு விபத்துகள் பெருமளவு குறைந்துள்ளன.
  வரும் காலங்களில் இதுபோன்று அனைத்துத் தரப்பினரும் முழு முயற்சியுடன் செயல்பட்டு, விபத்தே இல்லா தீபாவளியை கொண்டாடவேண்டும் என்பதே வெடிபொருள்கட்டுப்பாட்டுத் துறையின் விருப்பமாகும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com