சிவகாசி, இருக்கன்குடியில் இன்று மின்தடை

சிவகாசி மற்றும் இருக்கன்குடியில் சனிக்கிழமை (செப். 16) மின்தடை ஏற்படும் என, சிவகாசி மின்வாரியச் செயற்பொறியாளர் ஆர். செல்வம் தெரிவித்துள்ளார்.

சிவகாசி மற்றும் இருக்கன்குடியில் சனிக்கிழமை (செப். 16) மின்தடை ஏற்படும் என, சிவகாசி மின்வாரியச் செயற்பொறியாளர் ஆர். செல்வம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், சனிக்கிழமை பிற்பகல் 1 மணி முதல் மாலை 6 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.
பாரைப்பட்டி துணை மின்நிலையம்: பாரைப்பட்டி, பள்ளபட்டி, விஸ்வநத்தம், மாரியம்மன் கோயில் பகுதி, ஜக்கம்மாள் கோயில் பகுதி, பேருந்து நிலையப் பகுதி, நாரணாபும் சாலை. திருத்தங்கல் துணை மின்நிலையம்: திருத்தங்கல், செங்கமலநாட்சியார்புரம், கீழத்திருத்தங்கல், ஸ்டேட் பேங்க் காலனி, சாரதா நகர், பூவநாதபுரம், நடுவப்பட்டி, ஈஞ்சார், தேவர்குளம். சுக்கிரவார்பட்டி துணை மின்நிலையம்: சுக்கிரவார்பட்டி, அதிவீரன்பட்டி, நமஸ்கரித்தான்பட்டி, சாணார்பட்டி.
செவல்பட்டி துணை மின்நிலையம்: செவல்பட்டி, அப்பையநாயக்கன்பட்டி, மூர்த்திநாயக்கன்பட்டி, குகன்பாறை, இனாம் மீனாட்சிபுரம், சக்கம்மாள்புரம், அம்மையார்பட்டி, துலுக்கன்குறிச்சி.
வெம்பக்கோட்டை துணை மின்நிலையம்: வெம்பக்கோட்டை, சூரார்பட்டி, கோட்டைப்பட்டி, சல்வார்பட்டி, கே.மடத்துப்பட்டி, தாயில்பட்டி, விஜய்கரிசல்குளம், பனையடிபட்டி, சங்கரபாண்டியபுரம். சிவகாசி அர்பன் துணை மின்நிலையம்: கண்ணா நகர், காரனேசன் காலனி, பழனியாண்டவர்புரம் காலனி, நேரு சாலை, பராசக்தி காலனி, வடக்குரத வீதி, வேலாயுதம் சாலை, அண்ணா காலனி. சாட்சியாபுரம் துணை மின்நிலையம்: சாட்சியாபுரம், ரிசர்வ் லைன், தொழில்பேட்டை, போலீஸ் காலனி, ஆனையூர், விளாம்பட்டி, இ.பி.காலனி, ஹவுசிங் போர்டு, விஸ்வம் நகர், அய்பப்பன் காலனி, அய்யனார் காலனி, சசி நகர், சித்துராஜபுரம்.
நென்மேனி துணை மின்நிலையம்: நென்மேனி, இருக்கன்குடி, கோசுகுண்டு, என்.மேட்டுப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com