தாம்பரம்-செங்கோட்டை ரயிலுக்கு பாஜகவினர் சிவகாசியில் வரவேற்பு

தாம்பரம்-செங்கோட்டை விரைவு ரயிலுக்கு, சிவகாசியில் வெள்ளிக்கிழமை பாஜக.வினர் வரவேற்பு அளித்தனர்.

தாம்பரம்-செங்கோட்டை விரைவு ரயிலுக்கு, சிவகாசியில் வெள்ளிக்கிழமை பாஜக.வினர் வரவேற்பு அளித்தனர்.
செங்கோட்டையிலிருந்து ராஜபாளையம், சிவகாசி வழியே சென்னைக்கு பகல் நேர ரயில் இயக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்டநாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, ரயில்வே நிர்வாகம் தாம்பரம்-செங்கோட்டை விரைவு சிறப்பு ரயிலை, செப்டம்பர் 15ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை பரீச்சார்த்தமாக இயக்கப்படும் என அறிவித்திருந்தது.
அதன்படி, இந்த ரயில் தாம்பரத்திலிருந்து காலை 5 மணிக்கு புறப்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி வழியே செங்கோட்டையை மாலை 5.15 மணிக்கு சென்றடையும்.
மறுமார்க்கத்தில், செங்கோட்டையிலிருந்து காலை 6.15 மணிக்கு புறப்பட்டு, காலை 7.50 மணிக்கு சிவகாசியை அடைந்து, பின்னர் வந்த மார்க்கத்திலேயே தாம்பரத்துக்கு மாலை 6.30 மணிக்கு சென்றடையும். இந்த ரயில் தாம்பரத்திலிருந்து ஞாயிறு மற்றும் செவ்வாய்கிழமைகள் தவிர மற்ற நாள்களில் இயங்கும். செங்கோட்டையிருந்து திங்கள் மற்றும் புதன்கிழமைகள் தவிர மற்ற நாள்களில் இயங்கும்.
இந்த ரயில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.15 மணிக்கு சிவகாசி ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தது. அப்போது, விருதுநகர் மாவட்ட பாஜக மகளிர் அணித் தலைவி முத்துலட்சுமி தலைமையில், அக்கட்சியினர் இந்த ரயிலுக்கு வரவேற்பு அளித்தனர்.
ரயில் எஞ்ஜினுக்கு மலர் தூவி, மாலை அணிவித்தனர். ரயில் ஓட்டுநருக்கும் மாலை அணிவிக்கப்பட்டது. பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், அக்கட்சியின் மாவட்ட வழக்குரைஞர் பிரிவு துணைத் தலைவர் பி.கே.பி. பாலசுப்பிரமணியன், ஒன்றியத் தலைவர் சந்திரசேகரன், நகர துணைத் தலைவர் ஜி. ஆறுமுகச்சாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com