விருதுநகரில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 'ஜாக்டோ-ஜியோ' அமைப்பினர் 491 பேர் கைது

விருதுநகர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ- ஜியோ அமைப்பைச் சேர்ந்த 240 பெண்கள் உள்பட 491 பேரை, போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

விருதுநகர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ- ஜியோ அமைப்பைச் சேர்ந்த 240 பெண்கள் உள்பட 491 பேரை, போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யவேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைந்து 8-ஆவது ஊதிய மாற்றத்தை உடனே அமல்படுத்த வேண்டும். சிறப்புக் காலமுறை, தொகுப்பு ஊதியம், மதிப்பு ஊதியங்களை ரத்து செய்து வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 2 தினங்களாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும், வளாகத்திலேயே உணவு சமைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ- ஜியோ அமைப்பினரை வெள்ளிக்கிழமை போலீஸார் கைது செய்ய முயன்றனர். அப்போது, போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு சிலர் நான்கு வழிச் சாலையில் ஓடிச்சென்று படுத்துக் கொண்டனர். இதில், போலீஸார் வலுக்கட்டாயமாக இழுத்ததில், ஒரு சிலருக்கு சட்டை கிழிந்ததுடன், கைகளில் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டஜாக்டோ- ஜியோ அமைப்பைச் சேர்ந்த 240 பெண்கள் உள்பட 491 பேரை போலீஸார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர், அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்ததால், இவர்கள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட்டனர்.
ஜாக்டோ- ஜியோ அமைப்பு அறிவித்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com