கவிதை, கட்டுரை, பேச்சு போட்டி: விருதுநகர், சிவகாசி கல்லூரி மாணவர்கள் முதலிடம்

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு விருதுநகரில் நடைபெற்ற கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகளில் விருதுநகர், சிவகாசி கல்லூரி மாணவ,மாணவிகள் முதலிடம் பெற்றனர்.

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு விருதுநகரில் நடைபெற்ற கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகளில் விருதுநகர், சிவகாசி கல்லூரி மாணவ,மாணவிகள் முதலிடம் பெற்றனர்.
பிளஸ் 1, பிளஸ் 2, கல்லூரி மாணவர்களின் பல்வேறு திறமைகளை வெளிக்கொணரும் நோக்கில் தமிழ்வளர்ச்சித்துறையின் சார்பில் ஆண்டுதோறும் மாவட்டம் வாரியாக கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரியில் 2017-18 ஆம் ஆண்டிற்கு அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட அளவில் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடைபெற்றன.
இப்போட்டிகளுக்கான தலைப்புகள் போட்டி நடைபெறுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு நடுவர்கள் முன்னிலையில் முத்திரையிடப்பட்டிருந்த உறைகள் பிரிக்கப்பட்டு அறிவிக்கப்பட் டது. இதற்காக ஒன்பது பேராசிரியர்கள் நடுவராக நியமிக்கப்பட்டிருந்தனர். கவிதைப்போட்டியில் விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரி மாணவர் ரா.ராஜ்குமார் முதலிடம் பெற்றார். அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கல்லூரி மாணவர் சு.தமிழ்மணி இரண்டாமிடம், சிவகாசி எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரி மாணவி சு.மதுபாலா மூன்றாமிடம் பெற்றனர்.
கட்டுரைப்போட்டியில் சிவகாசி எஸ்.ஆர்.வி. கல்வியியல் கல்லூரி மாணவர் க.பாண்டித்துரை முதலிடத்தினையும், சிவகாசி எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரி மாணவி போ.சங்கரீஸ்வரி இரண்டாமிடத்தினையும், சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி மாணவர் ச.மணிகண்டன் மூன்றாமிடத்தினையும் பெற்றனர். பேச்சுப்போட்டியில் சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி மாணவர் ந.விஜயநம்பி முதலிடத்தினையும், கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி து.கனகசூர்யா இரண்டாமிடத் தினையும், காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரி மாணவர் ர.பாலமுருகன் மூன்றாமிடத்தினையும் பெற்றனர்.
இப்போட்டிகளில், ஒவ்வொரு போட்டிக்கும் முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.7ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரமும் என கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற ஒன்பது மாணவ, மாணவியர்களுக்கு ரூ.66 ஆயிரம் ரொக்கப் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் வழங்கி பாராட்டினார். இப்போட்டிகளுக்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் வெ.குமார் செய்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com