மின் ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை

ஸ்ரீவில்லிபுத்தூரில் மின்வாரிய பணியாளர்களுக்கு பாதுகாப்பான மின்சேவை குறித்த கருத்தரங்கு மற்றும் இலவச மருத்துவ சிகிச்சை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் மின்வாரிய பணியாளர்களுக்கு பாதுகாப்பான மின்சேவை குறித்த கருத்தரங்கு மற்றும் இலவச மருத்துவ சிகிச்சை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் இந்திய மருத்துவக் கழகத்தின் தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவின் உறுப்பினர் டாக்டர் ஏ.செல்வராஜன் கலந்து கொண்டு கூறியதாவது: ஒவ்வொரு உயிரும் விலைமதிப்பில்லாதது. மின்துறையில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களது உடல் மற்றும் உள்ளத்தை திடமாக வைத்துக் கொண்டால்தான் பொதுமக்களுக்கு சிறப்பாக சேவை செய்ய இயலும். குறிப்பாக மின் கம்பங்களில் ஏறி பொதுமக்களுக்கு சேவை செய்யும் பணியாளர்கள் 6 மாதங்களுக்கு ஒரு முறை தங்களது உடல் நிலையை மருத்துவரிடம் காட்டி பரிசோதனை செய்த கொள்ள வேண்டும் என்றார் அவர்.
பின்னர் பணியாளர்களுக்கு பல்வேறு மருத்துவ சோதனைகள் நடத்தப்பட்டு, டாக்டர் ஏ.செல்வராஜன் சிகிச்சை அளித்தார். இதில் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com