அங்கன்வாடி மையம் முன்பு குப்பைகளால் சுகாதாரக் கேடு

சிவகாசி அருகே அங்கன்வாடி மையம் அமைந்துள்ள பகுதியில் குப்பைகள் அள்ளப்படாமல் உள்ளதால் சுகாதாரக் கேடு பரவி வருகிறது.

சிவகாசி அருகே அங்கன்வாடி மையம் அமைந்துள்ள பகுதியில் குப்பைகள் அள்ளப்படாமல் உள்ளதால் சுகாதாரக் கேடு பரவி வருகிறது.
சிவகாசி அருகே ஆனையூர் ஊராட்சியில் காந்திநகர் பகுதியில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை சாலை உள்ளது. இந்தச் சாலையில் அங்கன்வாடி மையம். சமுதாயக் கூடம் ஆகியவை அமைந்துள்ளன.  இதன் அருகே ஊராட்சியால் அமைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டியில் பல நாள்களாக குப்பைகள் அள்ளப்படாததால் தொட்டி நிரம்பி வழிவதோடு,  தொட்டியை சுற்றிலும் குப்பை கொட்டப்படுவதால் சுகாதாரக் கேடு பரவி வருகிறது.
இந்தச் சாலை வழியே சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம்,  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இ.எஸ்.ஐ. மருத்துவமனை, சுகாதாரத் துறை அலுவலகம்,  வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அலுவலகம்,  பட்டாசு பாதுகாப்பு பயிற்சிப் பள்ளி ஆகியவற்றுக்கு செல்ல வேண்டும்.  இத்தனை முக்கிய அலுவலகங்கள் அமைந்துள்ள இந்தச் சாலையில்  குப்பைகள் அள்ளப்படாமல் உள்ளதால் சுகாதாரக் கேடு பரவி வருகிறது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் கூறியதாவது: ஊராட்சி உறுப்பினரிடம் இதுபோன்ற பிரச்னைகளை கூறி வந்தோம்.  
தற்போது உள்ளாட்சி அமைப்புகள் இல்லாததால், சாட்சியாபுரத்தில் உள்ள ஆனையூர் ஊராட்சிமன்ற அலுவலகத்திற்கு சென்று புகார் கூற வேண்டிய நிலை உள்ளது.  இங்கு உள்ள குப்பைத் தொட்டியில் மாதம் ஒரு முறை மட்டுமே குப்பைகள் அள்ளப்படுவதால்,  குப்பைகள் சாலையில் முழுவதும் பரவி சுகாதார கேட்டை ஏற்படுத்துகிறது. இதன் அருகில் அங்கன்வாடி மையம் உள்ளதால்,  இந்த சுகாதார கேட்டினால் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள்.
எனவே,  ஊராட்சி நிர்வாகம் குப்பை தொட்டியில் சேரும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com