கல்லூரியில் விதைபந்து தயாரிப்பு

சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி தாவரவியல்றை,  உயிர்தொழில்நுட்பவியல்துறை, கணினி பயன்பாட்டியல்துறை இணைந்து விதைபந்துகளை புதன்கிழமை தயாரித்தன.

சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி தாவரவியல்றை,  உயிர்தொழில்நுட்பவியல்துறை, கணினி பயன்பாட்டியல்துறை இணைந்து விதைபந்துகளை புதன்கிழமை தயாரித்தன.
களி மண்,  செம்மண் மற்றும் இயற்கை உரத்தை கலந்து அதில் மயில்கொன்றை, வேம்பு, புளியமர விதைகளை வைத்து பந்துபோல தயாரிக்கப்படுவதே விதைபந்துகளாகும்.
கல்லூரிக்கு வந்த விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானம், விதைபந்து எப்படி தயாரிக்கப்படுகிறது.  அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேராசிரியர்களிடம் கேட்டறிந்தார்.  பின்னர் அந்த விதைபந்துகள் முத்துலாபுரம் கிராமத்தில் உள்ள கண்மாயில் கரையிலிருந்தவாறு கண்மாயினுள் விதைபந்துகள் எறியப்பட்டன. மேலும் அங்குள்ள அரசு நிலங்களிலும்,  கண்மாய் கரைப் பகுதியிலும் சுமார் 3000 விதைபந்துகள் தூவப்பட்டன.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சி. முத்துக்குமரன், கல்லூரித் தாளாளர் ஏ.பி. செல்வராஜன், முதல்வர் சீ. கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் முருகன், ஜெயசீலன் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com