அருப்புக்கோட்டை அரசுக் கல்லூரியில் விஷப் பூச்சிகள் தொல்லை 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அரசுக் கல்லூரியில் பாம்பு உள்ளிட்ட  விஷப்பூச்சிகள் அடிக்கடி நடமாடுவதால் மாணவர்களிடையே

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அரசுக் கல்லூரியில் பாம்பு உள்ளிட்ட  விஷப்பூச்சிகள் அடிக்கடி நடமாடுவதால் மாணவர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தவிர்க்க அங்கு சுற்றுச்சுவர் அமைக்க மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 
அருப்புக்கோட்டையிலிருந்து பந்தல்குடி செல்லும் சாலையில் 5 கிலோமீட்டர் தொலைவில் அருப்புக்கோட்டை அரசுக் கல்லூரி செயல்பட்டுவருகிறது. இக்கல்லூரி கடந்த 2016-ஆம் ஆண்டு, மார்ச்  மாதம் முதல் இங்கு அமைக்கப்பட்ட புதிய கட்டடத்தில் இயங்கிவருகிறது.
இந்நிலையில் இக்கல்லூரியின் முகப்புப் பகுதியில் மட்டும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு மீதமுள்ள மூன்று பக்கங்களில் சுற்றுச்சுவர் அமைக்கப்படாமல் உள்ளது. இக்கல்லூரிக் கட்டடத்தின் பின்பகுதியில் அடர்ந்த முள்புதர்க் காடு உள்ளதால் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் சுற்றுச்சுவர் இல்லாததால் எளிதில்  கல்லூரிக்குள் வந்துவிடுகின்றன.
  எனவே சுற்றுச்சுவர் அமைத்திட வேண்டுமென மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் கல்லூரி வளாகத்தில் நிழல்தரும் மரங்கள் இல்லாததால் கோடைவெப்பம் கடுமையாகத் தாக்குவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே விரைந்து செயல்பட்டு கல்லூரி வளாகத்தில் நிழல் தரும் மரங்களை வளர்ப்பதுடன் அனைத்துப் பக்கங்களுக்கும் முழுமையாக சுற்றுச்சுவர் அமைக்க வேண்டுமென மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com