இருக்கன்குடி - சாத்தூர் குடிநீர் திட்டத்தை விரைந்து முடிக்க கோரிக்கை

இருக்கன்குடி-சாத்தூர் குடிநீர்திட்டப் பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இருக்கன்குடி-சாத்தூர் குடிநீர்திட்டப் பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இருக்கன்குடி அணையிலிருந்து சாத்தூர் நகராட்சி பகுதிக்கு குடிநீர் வழங்கும் திட்டம் கடந்த ஓராண்டிற்கு முன்பாக சட்டப் பேரவை உறுப்பினர் நிதியிலிருந்து வறட்சி நிவாரண திட்டத்தின் கீழ் ரூ.3.கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. இந்த திட்டம் நகராட்சி பகுதியில் வசிப்பவர்களுக்கு குடிநீர் தங்கு தடையின்றி வழங்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு இந்த  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இத்திட்டம் இருக்கன்குடி அணையிலிருந்து சாத்தூர் நகராட்சி பகுதிக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படும். இருக்கன்குடி அணையில் உறைகிணறுகள் அமைத்து  குழாய்கள் மூலம் சாத்தூர் நகராட்சி பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யும் வகையில் இது திட்டமிடபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
இத்திட்டத்திற்கானப் பணிகள் தொடங்கப்பட்டு ஓராண்டாகியும் தற்போது வரை முடிக்கப்படவில்லை. இந்த திட்டம் சாத்தூர் நகராட்சி பகுதியில் கோடைகாலத்தில் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை இத்திட்டப் பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது, இதை அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
 எனவே பொது மக்கள் நலன் கருதி போர்க்கால அடிப்படையில் இருக்கன்குடி-சாத்தூர் குடிநீர் திட்டத்தை விரைந்து முடிக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com